உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் ஸ்டாண்ட் பணி இ. கம்யூ., கேள்வி

பஸ் ஸ்டாண்ட் பணி இ. கம்யூ., கேள்வி

சிவகங்கை: சிவகங்கையில் இந்திய கம்யூ., மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மானாமதுரை ஒன்றிய செயலாளர் சங்கையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன், இந்திய கம்யூ,, மாவட்ட செயலாளர் சாத்தையா முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் மருது, கோபால், விவசாய சங்க மாவட்ட செயலாளர் காமராஜ், பொருளாளர் மணவாளன், ஒன்றிய செயலாளர் சின்னகருப்பு, நகர் செயலாளர் சகாயம் பங்கேற்றனர்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தரமான பணிகள் நடக்கிறதா என அதிகாரிகள் ஆய்வு மூலம் உறுதி செய்ய வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர இடம் ஒதுக்கிதர வேண்டும். அண்ணாமலை நகரில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும். சிவகங்கை நகரின் மையப்பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி