உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் உயர்வுக்கு படி முகாம்

திருப்புத்துாரில் உயர்வுக்கு படி முகாம்

சிவகங்கை: திருப்புத்துாரில் உயர்வுக்கு படி முகாம் நடைபெற்றது.தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து முன்னிலை வகித்தார். முகாமில் அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக், தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலம் உடனடி சேர்க்கை மேற்கொள்ளப்பட்டது. இம்முகாமில் 62 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 8 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை அனுமதி வழங்கினர். மேலும் 10 மாணவர்கள் உயர்கல்வியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். முகாமில் முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், திருப்புத்துார் தாசில்தார் மாணிக்கவாசகம், கலெக்டரின் தனி எழுத்தர் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை