மானாமதுரை காந்திஜி நகரில் கால்வாய் சீரமைப்பு பணி
மானாமதுரை: மானாமதுரை காந்திஜி நகரில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் எதிரொலியாக, நேற்று நகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகளை மேற்கொண்டனர். இந்நகரில் போதுமான சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் முழுமையாக நிறைவேற்றித்தரப்படவில்லை. மேலும் சிறிய மழைக்கு கூட கழிவுநீருடன் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில்ஈடுபட்டனர். வருவாய், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர். மக்களின் போராட்டத்தை தொடர்ந்துநேற்று மானாமதுரை நகராட்சி அதிகாரிகள், கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து வருகின்றனர். மேலும் இந்நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாசில்தார் கிருஷ்ணகுமார், நகராட்சி கமிஷனர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் ஆகியோர் தலைமையில் அகற்றி வருகின்றனர்.