உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை ரயில்வே சுரங்கப்பாதையில்  சிக்கிய கார் : நிரந்தர தீர்வு எப்போது

சிவகங்கை ரயில்வே சுரங்கப்பாதையில்  சிக்கிய கார் : நிரந்தர தீர்வு எப்போது

சிவகங்கை: சிவகங்கையில் நேற்று முன்தினம் 95.5 மி.மீ., பெய்த மழைக்கு, ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய நீரில் கார் சிக்கியது. சிவகங்கையில், 2012ம் ஆண்டில் மதுரை --தொண்டி ரோட்டில் ரயில்வே மேல் பாலம் கட்டினர். இந்த பாலத்திற்கு கீழே சுரங்கப்பாதை அமைத்தனர். சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீர் வெளியேற தேவையான பணிகளை தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் மேற்கொள்ளவில்லை. இதனால், சிறு மழைக்கு கூட ரோட்டில் செல்லும் மழைநீர் சுரங்கப்பாதையில் தேங்கிவிடும். தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணி நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அடிக்கடி மின்மோட்டார் பழுது எனக்கூறி தண்ணீரை வெளியேற்றுவதில்லை. சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீருக்கு நிரந்தர தீர்வு காண நகராட்சியோ, மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று முன்தினம் மாலை 5:30 மணி முதல் 6:15 மணி வரை சிவகங்கையில் மட்டுமே 95.5 மி.மீ., மழை பதிவானது. இதனால், ரயில்வே சுரங்கப்பாதையில் 4 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது.

சுரங்கப்பாதை நீரில்சிக்கிய கார்

சிவகங்கை கல்லுாரி ரோட்டை சேர்ந்தவர் காரில் சுரங்கப்பாதைக்குள் சென்றபோது, கார் நீரில் மூழ்கியது. மீண்டும் காரை எடுக்க முடியாமல் திணறினார். சரக்கு வாகனத்தில் கயிறு கட்டி, காரை வெளியேற்றினர். இது போன்று ஒவ்வொரு மழை காலத்திலும், சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்குவதன் மூலம் சிவகங்கையில் இருந்து ஆயுதப்படை குடியிருப்பு, வந்தவாசி, ரோஸ் நகர், கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனன மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை