உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வி.ஏ.ஓ., மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

வி.ஏ.ஓ., மீது தாக்குதல் 7 பேர் மீது வழக்கு

மானாமதுரை : மானாமதுரை அருகே எஸ்.காரைக்குடி முளைப்பாரி ஊர்வலத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் வி.ஏ.ஓ., உட்பட 5 பேர் காயமுற்றனர். இது குறித்து 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மானாமதுரை அருகே எஸ்.காரைக்குடியில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தினர் மீது கற்கள், கம்புகளை வீசி தாக்கினர். இதில் எஸ்.காரைக்குடி வி.ஏ.ஓ., மணிகண்டன், போலீசார் உட்பட 5 பேர் காயமுற்றனர். வி.ஏ.ஓ., புகாரின்பேரில் 7 பேர்கள் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை