உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டோல்கேட் கட்டணம் வசூல் தடை கோரி வழக்கு

டோல்கேட் கட்டணம் வசூல் தடை கோரி வழக்கு

மதுரை: திருப்பத்துார் அருகே கீழச்சிவல்பட்டி சண்முகம். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டை பைபாஸ் ரோடு செண்பகம்பேட்டை நான்குவழிச்சாலையில் டோல்கேட் உள்ளது. விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதால் டோல்கேட்டை அகற்ற ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. அதை அகற்ற பிப்.12 ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மீறி வாகன உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வாகன ஓட்டிகள்,டோல்கேட் ஊழியர்களிடையே பிரச்னை ஏற்படுகிறது.டோல்கேட் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்,இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர், சிவகங்கை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி