கோட்டையூரில் கால்நடைகள் இறப்பு
காரைக்குடி: காரைக்குடி ஸ்ரீராம் நகரில், கால்நடைகள் தொடர்ந்து உயிரிழப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காரைக்குடி மாநகராட்சியை ஒட்டி அமைந்துஉள்ள கோட்டையூர் ஸ்ரீராம்நகர் பகுதி வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதிகளில் மான்கள் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. கால்நடைகளும் அதிக அளவில் உள்ளன. ஸ்ரீராம்நகர் பாரிநகர், அண்ணாமலையார் நகர் பகுதிகளில் தண்ணீர் தேடி வரும் மான்களை நாய்கள் கடித்து பலியாகும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. மேலும், இப்பகுதியில் சுற்றி திரியும் ஆடுகள் அவ்வப்போது இறந்து கிடக்கும் அவலமும் நிலவுகிறது. இந்நிலையில், ஒரே நாளில் அதியமான் வீதி மற்றும் குமணன் வீதியில், மாடு மற்றும் கன்றுகுட்டி உயிரிழந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.