உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் கோயில் காவலாளி கொலையில் விரைவில் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்

மடப்புரம் கோயில் காவலாளி கொலையில் விரைவில் சி.பி.ஐ., விசாரணை துவக்கம்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை துவங்க உள்ளதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் போலீசார் நடத்திய விசாரணையின் போது இறந்தார். இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இந்த வழக்கு விசாரணையில் எந்தவிதமான ஐயப்பாடும் எழக்கூடாது என்பதற்காக இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றினார். தமிழ்நாடு அரசு அரசிதழிலும் வெளியீடு செய்தது.இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணை ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சி.பி.ஐ., விசாரணையை துவக்க ஒருவார கால அவகாசம் நீதிமன்றம் கொடுத்துள்ளது. தற்போது வரை இவ்வழக்கு குறித்து விசாரிக்க அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. விரைவில் டில்லியில் இருந்தோ அல்லது சென்னை, மதுரையில் இருந்தோ சி.பி.ஐ., அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து விசாரணை துவக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை