உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே பிரவலுாரில் வீட்டிலிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பிரவலுாரைச் சேர்ந்த கணேசன் மனைவி ஜானகி 80. இவர் மகன்,மருமகளுடன் வசித்து வருகிறார். மகன் மூவேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மதியம் 1:45 மணிக்கு மருமகள் லதா சிவகங்கை சென்றார். மூதாட்டி ஜானகி வீட்டில் தனியாக இருந்தார். இது அறிந்த நபர்கள் முகத்தில் கருப்பு துணியை சுற்றிக்கொண்டு வீட்டில் புகுந்து ஜானகி அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து மூதாட்டி மருமகள் லதா மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை