உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மூதாட்டியிடம் செயின் பறிப்பு

காரைக்குடி: காரைக்குடி டி.டி., நகர் 2 வது வீதியை சேர்ந்தவர் வள்ளியம்மை 75. இவர் நேற்று இரவு வீட்டின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுவிட்டு நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலிச்செயினை பறித்துச் சென்றனர். இதில் மூதாட்டி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !