மாதாபுரத்தில் தேர் பவனி
இளையான்குடி: இளையான்குடி அருகே மாதாபுரம் புனித சந்தன மாதா ஆலய திருவிழா ஆக. 6ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. தினமும் நடைபெற்ற நவ நாள் திருப்பலி பாதிரி யார்கள் அந்தோணி, அமலன்,கிளிண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கு இறைமக்கள் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பிரார்த்தனை செய்தனர். மின் அலங் காரம் செய்யப்பட்ட தேரில் துாய சந்தன மாதா சொரூபம் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஏற்பாடுகளை மாதா புரம் பங்கு உறுப்பினர்கள், இறைமக்கள், புனித வின்சென்ட் பவுல் சபையினர், மரியாவின் சேனையினர் செய்திருந்தனர்.