மேலும் செய்திகள்
வாறுகால் அடைப்பால் ரோட்டில் ஓடும் கழிவு நீர்
23-Nov-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாலத்துக்கு அடியில் கொட்டப்படும் கோழிக் கழிவுகளால் விவசாயிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இவ்வொன்றியத்தில் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காளாப்பூர் பெரிய பாலத்தை ஒட்டி பழைய பாலத்துக்கு அடியில் இறைச்சி கடைக்காரர்கள் சாக்குப் பைகளில் கோழிக்கழிவுகளை கொண்டு வந்து போட்டு செல்கின்றனர். அவ்வழியாக விவசாயிகள், வாகன ஓட்டிகள் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் வரும்போது கோழிக் கழிவு தண்ணீரில் கலந்து மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே கோழிக் கழிவுகளை கொட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-Nov-2025