உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் மக்களுடன் முதல்வர்

திருப்புவனத்தில் மக்களுடன் முதல்வர்

திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வரவேற்றார். செயல் அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், பெயர் மாற்றம், முதியோர் ஓய்வூதியம், மின் இணைப்பு பெயர் மாற்றம் உள்ளிட்ட 794 மனுக்கள் பெறப்பட்டது. மாவட்ட வழங்கல் அலுவலர் சபீதா பேகம், எம். எல்.ஏ., தமிழரசி, தாசில்தார் விஜயகுமார், மின்வாரிய கோட்ட பொறியாளர் ஜான்சன், பேரூராட்சி துணை தலைவர் ரகுமத்துல்லா, பேரூராட்சி உறுப்பினர்கள் செல்வி ரவி, ராமலெட்சுமி பாலகிருஷ்ணன், மாரிதாசன், கண்ணன், பாலகிருஷ்ணன், வேல்பாண்டி, சித்ரா ஆறுமுகம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ