மேலும் செய்திகள்
மானாமதுரை கொலை வழக்கு 5 பேர் மீது 'குண்டாஸ்'
26-Oct-2024
மானாமதுரை : மானாமதுரை அருகே கீழப்பசலை தடுப்பணையில் தண்ணீர் செல்வதை தொடர்ந்து சிறுவர்கள் டைவ் அடித்து உற்சாககுளியல் போட்டு வருகின்றனர்.மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் மானாமதுரை வைகை ஆற்றில் கீழப்பசலை உள்ளிட்ட 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக தண்ணீர் செல்கிறது. அங்கு ஏராளமான சிறுவர்கள் டைவ் அடித்து உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். மேலும் ஏராளமானோர் ஆற்றுத்தண்ணீரில் வரும் மீன்களையும் பிடித்து அங்கேயே விற்பனை செய்து வருகின்றனர்.
26-Oct-2024