உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குழந்தைகள் அறிவியல் மாநாடு

குழந்தைகள் அறிவியல் மாநாடு

சிவகங்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக குழந்தைகள் அறிவியல் மாநாடு சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் முத்துலட்சுமி, கிளை தலைவர் மணவாளன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் அறிமுக உரையாற்றினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முருகன் மாநாட்டை துவக்கி வைத்தார்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சேவற்கொடியோன் பிப்.1ஆம் தேதி தென்காசியில் நடைபெறவிருக்கும் மண்டல மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளை அறிவித்தார். மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கநிலை ஜோதிலட்சுமி குழந்தை விஞ்ஞானிகளுக்கு கேடயமும் சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் சாஸ்தா சுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை