உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் வட்ட பேருந்து இயக்கம்

காரைக்குடியில் வட்ட பேருந்து இயக்கம்

காரைக்குடி: காரைக்குடியில் அரசு மருத்துவமனை, கல்லுாரி ரோடு, பத்திரபதிவு அலுவலகம் வழியாக இரண்டு வட்ட பேரூந்துகள் இயக்கம் துவக்கப்பட்டது. புதிய வழித்தட பஸ்களை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இந்த பஸ் காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொப்புடைய நாயகி கோயில், நடராஜா தியேட்டர், பழைய அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன், புது பஸ் ஸ்டாண்ட், பெரியார் சிலை, வருமான வரி அலுவலகம், அழகப்பா அரசு கல்லுாரி, ஸ்ரீராம் நகர், பர்மா காலனி, வாட்டர் டேங்க், கழனிவாசல், போக்குவரத்து நகர், புதிய அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., அலு வலகம், ஆவின் அலு வலகம் வழியாக சென்று வருகிறது. தினமும் அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, 9 சுற்றுக்களாக இந்த பஸ் இயக்கப்படும். காரைக்குடி எம்.எல்.ஏ., மாங்குடி, மாநகராட்சி மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ