வகுப்பறை கட்டடம் திறப்பு
திருப்புத்துார்; கல்லல் ஒன்றியம் சிராவயல் ஊராட்சியைச் சேர்ந்த அதிகரத்தில் ஆ.தி.ந. அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ 1.27 கோடியில் 4 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைக் கட்டடங்கள் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி குத்துவிளக்கேற்றினர். ஆதிதிராவிடர் நல அலுவலர் கீர்த்தனா மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர், தாட்கோ (மதுரை மண்டலம்) சேவுககுமரன், தாசில்தார் மாணிக்கவாசகம், தலைமையாசிரியர் பொன்மனச்செம்மல் பங்கேற்றனர். அங்கிருந்த ஆதி திராவிடர் மாணவர் விடுதியை அமைச்சர் ஆய்வு செய்தார்.