உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வகுப்பறை திறப்பு விழா

வகுப்பறை திறப்பு விழா

மானாமதுரை: மானாமதுரை அருகே எம். கரிசல்குளம் குட்வில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோபோடிக்ஸ் வகுப்பறை துவக்க விழா நடைபெற்றது.தாளாளர் பூமிநாதன் தலைமை வகித்து புதிய ரோபோடிக்ஸ் வகுப்பறைகளை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி வைத்தார். முதல்வர் சுபாஷினி முன்னிலை வகித்தார்.வகுப்பறைகளில் மாணவர்களின் ரோபோட்டிக்ஸ் பயன்பாடு, மாணவர்கள் ரோபோக்களை தயாரித்து பயன்படுத்துவது மற்றும் ரோபோக்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு தினந்தோறும் ரோபோடிக்ஸ் வகுப்பு துவங்கப்பட்டு பாடங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி