உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இடிந்து விழும் வாகன கூரை

இடிந்து விழும் வாகன கூரை

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட கருவூலகம் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதால் வாகனங்களை நிறுத்த அரசு அலுவலர்கள் அச்சப்படுகின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகம் கட்டடம் கட்டி 40 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த வளாகத்தில் எஸ்.பி.,அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், பள்ளிக்கல்வி துறை, மாவட்ட கருவூலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகிறது. கட்டடம் கட்டும்போது ஒவ்வொரு அலுவலகத்திற்கு அருகிலும் வாகன நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடங்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டடங்களும் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மாவட்ட கருவூலகம் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் கூரை பெயர்ந்து அடிக்கடி விழுவதால் அரசு அலுவலர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த அச்சப்படுகின்றனர். சேதம் அடைந்துள்ள இந்த டூவீலர் ஸ்டாண்டை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசு அலுவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை