உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர்களை சரிபார்க்கும் பணி கலெக்டர் பொற்கொடி தகவல் 

 வாக்காளர் பட்டியலில் இறந்தோர் பெயர்களை சரிபார்க்கும் பணி கலெக்டர் பொற்கொடி தகவல் 

சிவகங்கை: சிறப்பு தீவிர திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல் போனவர், இடம் பெயர்ந்தோர், இறந்தோர் (ஏ.எஸ்.டி., பட்டியல்) சரிபார்க்கும் பணி நடப்பதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் வாக் காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விண்ணப்பம் 100 சதவீதம் வழங்கி, திரும்ப பெற்று பதி வேற்றம் பணி நடக்கிறது. இதில் பட்டியலில் அனைத்து வாக்காளர்களும் இடம் பெறுவதை உறுதி செய்யும் விதத்தில் வாக்காளர் இடம் பெற்று உள்ள அந்தந்த பாகங்களுக்குரிய (ஏ.எஸ்.டி.,) காணாமல் போனவர், இடம் பெயர்ந்தோர், இறந்தவர் விவரங்களை சரிபார்க்கும் பணி டிச.,11க்குள் முடிக்கும் வகையில் செயல் படுகிறது. சிவகங்கை நகராட்சி மீனாட்சிநகர் பாகம் 110ல் எண் 1076 மற்றும் 1077ல் வாக்காளர்களாகிய இந்துஜா, ரமேஷ் ஆகியோரது பெயர்கள் வாக்காளர் தீவிர திருத்த பணிகளின் போது தயாரித்த பரிட்சார்த்த பட்டியலில் (செக் லிஸ்ட்) இறந்தோர் பட்டியலில் இருப்பதாக அக்கட்சி யினர் தெரிவித்தனர். இந்த பரிட்சார்த்த பட்டியல் அரசியல் கட்சி பூத் ஏஜன்ட்களுக்கு வழங்கியதே, குறை, பிழை கண்டறிந்து திருத்தம் செய்வதற்கு தான். இது இறுதி வாக்காளர் பட்டியல் அல்ல என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை