மேலுார்--காரைக்குடி பைபாஸ் ரோடு நில எடுப்பிற்கான இழப்பீடு தொகை
சிவகங்கை: மேலுார் - காரைக்குடி இடையே நான்கு வழிச்சாலை பணிக்காக, பைபாஸ் ரோடு அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. சிங்கம்புணரி அருகே நயினாபட்டி, மாம்பட்டி வடக்கு, தெற்கு, திருப்புத்துார் அருகே பட்டாக்குறிச்சி, பிராமணம்பட்டி, தானிப்பட்டி, தேவரம்பூர், காட்டாம்பூர், தென்மாபட்டு, திருப்புத்துார், வாணியங்காடு, தென்கரை, சிறாவயல், சிறுகூடல்பட்டி, குன்றக்குடி, தட்டட்டி, காரைக்குடி அருகே மானகிரி சுக்கானேந்தல், கழனிவாசல் ஆகிய கிராமங்களில் ரோடு பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை பெறாதவர்கள், தங்களது நிலத்திற்கான ஆவணங்களை காண்பித்து, திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய பழைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தனி தாசில்தார் (நில எடுப்பு), தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தில் இழப்பீடு தொகையை பெற்று செல்லலாம் என புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பணி (நில எடுப்பு) மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார்.