மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
5 hour(s) ago
பயிற்சி முகாம்
5 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
5 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
5 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
5 hour(s) ago
சிவகங்கை: திருப்புத்துார் அருகே மாதவராயன்பட்டியில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கிராமத்தினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்தனர்.திருப்புத்துார் ஊராட்சி ஒன்றியம், நெடுமரம் அருகே மாதவராயன்பட்டி ஊராட்சியில் கிராமத்திற்கு சொந்தமான மன்னுனிகருப்பர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் உள்ளது. இக்கோயில் இடத்தை சிலர் ஆக்கிரமித்து, அந்நிலத்தில் இருந்த மரங்களை வெட்டியுள்ளனர். இது குறித்து மாதவராயன்பட்டி வி.ஏ.ஓ.,விடம் புகார் செய்தனர். மரங்களை வெட்ட வி.ஏ.ஓ., தடை விதித்தார். இந்நிலையில் ஊராட்சி சார்பில் கோயிலுக்கு பேவர் பிளாக் சாலை அமைத்து தருவதாக கூறி, தனி நபர் வீட்டிற்கு சாதகமாக பேவர் பிளாக் சாலை அமைத்துள்ளதாக தெரிவித்து, மாதவராயன்பட்டி கிராமத்தினர் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரனிடம் புகார் அளித்தனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago