யுடியூபர் மீது புகார்
சிவகங்கை ஐந்தாம் தமிழர் சங்க நிறுவனரும், யூடியூபருமான பாண்டியன் என் பவர் யுடியூப் சேனலில், நாயுடு சமுதாய பெண்கள் குறித்து இழிவாக பேசி வெளியிட்டுள்ளார். இழிவாக பேசிய பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை மாவட்ட நாயுடு மகாஜன சங்க தலைவர் தசரதன், செயலாளர் சாந்தானகிருஷ்ணன், பொருளாளர் பாண்டித்துரை ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.