உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் குளத்தில் அனுமதியின்றி தண்ணீர் எடுப்பு நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார் 

காளையார்கோவிலில் குளத்தில் அனுமதியின்றி தண்ணீர் எடுப்பு நிலத்தடி நீர் பாதிப்பதாக புகார் 

சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், முத்துார் வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் குளத்தில், அரசின் முன் அனுமதியின்றி ஆழ்குழாய் அமைத்து, தண்ணீர் எடுத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது போன்று பல இடங்களில் தண்ணீர் எடுப்பதால், அய்யனார் குளம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதோடு, பிற வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.எனவே அரசு, அனுமதியின்றி தண்ணீர் எடுப்பவர்கள் முறைப்படி லைசென்ஸ் பெற்றும், சுகாதாரமான முறையில் குடிநீரை சுத்திகரிப்பு செய்து, விற்பனைக்கு அனுப்புகிறார்களா என விசாரிக்க வேண்டும் என முத்துார் வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார்குளம், மோர்குழி, அரியநாச்சி குடியிருப்பு பகுதி மக்கள் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர்.

கண்டு கொள்ளாத அதிகாரிகள்

கிராம மக்கள் கூறியதாவது: கலெக்டரிடம் இது குறித்து புகார் அளித்தபோது, வி.ஏ.ஓ., மற்றும் நிலத்தடி நீர்மட்ட (குடிநீர் வடிகால்வாரிய) அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்து சென்றனர்.அதற்கு பின் 'மினரல் வாட்டர்' கம்பெனி நடத்த உண்மையான லைசென்ஸ் உள்ளதா, விதிப்படி ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார்களா என்பது குறித்து விசாரிக்குமாறு வருவாய், குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை