உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு

ஆசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு

சிவகங்கை : சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், கல்லுாரி இயற்பியல் துறையும் இணைந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி அறிவியல்ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. துவக்க விழாவில் இயற்பியல்துறை தலைவர் ஸ்டாலின் மனோகிப்சன் வரவேற்றார். முதல்வர் துரையரசன் தலைமை வகித்தார். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் புவனேஸ்வரன் பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.நிறைவு விழாவில் இயற்பியல்துறை இணைப்பேராசிரியர் மகாலட்சுமி வரவேற்றார். பொறுப்பு முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மதுரைக் கல்லுாரி கல்விப்புல முதன்மையர் சிவராமகிருஷ்ணன் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இயற்பியல்துறை தலைவர் ஸ்டாலின் மனோகிப்சன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை