மேலும் செய்திகள்
சாத்துாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அவசியம்
15-Apr-2025
மானாமதுரை : மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டில் சர்வீஸ் ரோட்டை ஒட்டி கடைகள் கட்டி வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.மதுரை -- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. புது பஸ் ஸ்டாண்ட் வளாகம் ஏற்கனவே இடநெருக்கடியாக உள்ளது.இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் முகப்பை மறைத்து ஸ்டாண்டுகள் அமைத்துள்ளனர்.பஸ் ஸ்டாண்ட் பின்னால் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்னை பஸ்கள் நின்று செல்லும்.இதற்கிடையில் நகராட்சி நிர்வாகம் சர்வீஸ் ரோடு பகுதியில் புதிதாக கட்டி வருகின்றது. இதனால் சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர்.ஏற்கனவே கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் இங்கேயே தான் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.இந்நிலையில் சர்வீஸ் ரோட்டில் புதிதாக கடைகள் கட்டினால் மேலும் நெரிசல் அதிகரிக்கும்.எனவே நகராட்சி நிர்வாகம் சர்வீஸ் ரோட்டில் கடைகள் கட்டும் திட்டத்தைகைவிட வேண்டும்.
15-Apr-2025