உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரிக்கு அவசியமில்லை அரசு கடிதத்தால் காங்., எம்.பி.,அதிர்ச்சி

சிவகங்கையில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரிக்கு அவசியமில்லை அரசு கடிதத்தால் காங்., எம்.பி.,அதிர்ச்சி

காரைக்குடி:சிவகங்கை மாவட்டத்தில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரி துவங்க அவசியம் இல்லை என அரசு அதிகாரிகள் பதில் அளித்துள்ளதால் கார்த்தி எம்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளார்.சிவகங்கையில் வேலு நாச்சியார் பெயரில் பெண் காவலர் பயிற்சி கல்லுாரி தொடங்க வேண்டும் என்று கார்த்தி எம்.பி., தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வந்தார்.அவரது கோரிக்கைக்கு கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் பதில் கடிதம் அளித்துள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் திருவள்ளூர், மதுரை ,கோயம்புத்துார், சேலம், துாத்துக்குடி, வேலுார், திருச்சி, விழுப்புரம் ஆகிய 8 இடங்களில் நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்து 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த காவலர் பயிற்சி பள்ளிகள் அவை அமைந்திருக்கும் நகரின் பெயரிலேயே இயங்கி வருகின்றன.காவலர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏற்கனவே இயங்கி வரும் பயிற்சி பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு குறைவானதாகவே இருக்கிறது. எனவே பெண் காவலர்களுக்கு என்று பிரத்யேகமாக புதிய காவலர் பயிற்சி பள்ளி துவங்க வேண்டிய சூழல் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.இக்கடிதம் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும், வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில் புதிய பெண் காவலர் பயிற்சி பள்ளி துவங்க உத்தரவிடுமாறு முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்த உள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி