உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆட்டோவில் கட்டுமான பொருள் திருப்புவனத்தில் விபத்து அபாயம்

ஆட்டோவில் கட்டுமான பொருள் திருப்புவனத்தில் விபத்து அபாயம்

திருப்புவனம் : திருப்புவனம் பகுதிகளில் பயணிகள் ஆட்டோவில் பலரும் விதிகளை மீறி கட்டுமான பொருட்கள், பிளாஸ்டிக் பைப் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. திருப்புவனம் நகரில் 200க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பயணிகளை ஏற்றி வருவதுடன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் போதிய பாதுகாப்பின்றி பிளாஸ்டிக், இரும்பு பைப் இரும்பு கம்பி, கருவேல மர விறகுகள் உள்ளிட்டவற்றையும் ஏற்றி வருகின்றனர். ஆட்டோவை விட அவற்றில் ஏற்றி வரும் இரும்பு கம்பிகள் நீளமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள், மற்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். ஆட்டோவின் உள்ளே சரக்குகளை ஏற்றுவதுடன் ஆட்டோவின் மேற்பகுதி லக்கேஜ் கேரியரிலும் அளவிற்கு அதிகமாக சுமைகளை ஏற்றி வலம் வருகின்றனர். எனவே விபத்து ஏற்படுத்தும் வகையில் பொருட்களை கொண்டு செல்லும் பயணிகள் ஆட்டோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை