உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

மானாமதுரை : மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டையில் மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ராமமுருகன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிப்காட் தொழிற்பேட்டையில் மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இக்கூட்டத்தில் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மானாமதுரையில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை