மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
8 hour(s) ago
விடுதி அருகே எரிந்த வேன்
8 hour(s) ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
8 hour(s) ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
8 hour(s) ago
சிவகங்கை: சேவை குறைபாடு செய்த வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திலகர் நகரை சேர்ந்தவர் கருணாகரன் மகன் புலிதேவன்பாண்டியன். இவர் 2013 ஜூன் 28ம் தேதி தேசிய மயமாக்கப்பட்ட வங்கி திருப்புத்துார் கிளையில் ஏலம் விடப்பட்ட டிராக்டரை பொது ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த டிராக்டரின் முதல் உரிமையாளர் பெயரில் ஆர்.சி., புத்தகம் இருந்துள்ளது. வங்கி ஆர்.சி.யை புலிதேவன்பாண்டியனுக்கு கொடுக்கவில்லை. ஆர்.சி.யில் பெயர் மாற்றம் செய்ய வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை.புலிதேவன்பாண்டியன் சிவகங்கை ஆர்.டி.ஒ.,அலுவலகத்தில் டிராக்டர் ஆர்.சி. ஜெராக்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றுடன் 2013 ஜூலை 10ம் தேதி பணம் கட்டிய ரசீதை இணைத்து ஆர்.சி.ஐ., தனது பெயருக்கு மாற்ற விண்ணப்பித்த போது வங்கி தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆர்.டி.ஒ., அலுவலத்தில் கூறியுள்ளனர்.புலித்தேவன்பாண்டியன் திருப்புத்துாரிலுள்ள வங்கிக்கு சென்று கூறியும், டிராக்டரின் உரிமையாளரிடம் ஆர்.சி.,புக் பெற்று ஆர்.டி.ஒ.,அலுவலத்தில் வங்கி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.டிராக்டர் ஆர்.சி. அசல் இல்லாததால் புலிதேவன்பாண்டியன் டிராக்டரை இயக்க முடியாமலும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமலும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த புலிதேவன்பாண்டியன் தன்னை அலைக்கழிப்பு செய்து மன உளைச்சல் செய்து கால விரயம் ஏற்படுத்திய வங்கி மேலாளர், தலைமை மேலாளர், ஆர்.டி.ஒ., மீது மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பாலசுப்பிரமணியம், உறுப்பினர் குட்வின் சாலமோன்ராஜ் விசாரித்தனர்.வங்கி, வாகனத்தை கைப்பற்றிய பின் தங்கள் பெயருக்கு ஆர்.சி. பெயர் மாற்றம் செய்யாமல் வண்டியை ஏலத்திற்கு விட்டு, ஏலம் எடுத்தவரை ஆர்.சி. பெயர் மாற்றம் செய்து கொள்ள சொல்லி சேவை குறைபாடு செய்த குற்றத்திற்காகவும், வங்கி ஆர்.சி.யை பெயர் மாற்றம் செய்து கொடுக்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தி வாகனத்தை சட்டப்படி பயன்படுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியதற்கு புலிதேவன்பாண்டியனுக்கு மொத்த இழப்பீடாக ரூ 2 லட்சம் வழங்க வேண்டும் என்றும், வழக்குச் செலவு தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.இந்த தொகையை வங்கி கிளை மேலாளரும், தலைமை மேலாளரும் இரண்டு மாதத்திற்குள் செலுத்த வேண்டும். தவறினால் தீர்ப்பு தேதியில் இருந்து முழுத்தொகையும் செலுத்தி முடிக்கும் வரை ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago