உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மணல், சிமென்டிற்கு பணம் தரவில்லை; ஒப்பந்ததாரர்கள் குமுறல்

மணல், சிமென்டிற்கு பணம் தரவில்லை; ஒப்பந்ததாரர்கள் குமுறல்

சிவகங்கை : தேசிய வேலை உறுதி திட்ட நிலுவை தொகையை தமிழக அரசு விடுவிக்காததால், பணி செய்த ஒப்பந்ததாரர்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில் அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் 91 லட்சம் பேர் பணி செய்கின்றனர். இது தவிர இத்திட்டத்தின் கீழ் கண்மாய் மடை சீரமைத்தல், தார், மெட்டல், பேவர் பிளாக் ரோடு அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு மணல், சிமென்ட், ஜல்லி உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தொகையை பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு அரசு விடுவிக்க வேண்டும்.2024--2025ம் ஆண்டிற்கான நிதியை மாநில அரசு இது வரை விடுவிக்கவில்லை. இம்மாத துவக்கத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.2999 கோடி விடுவித்துவிட்டது. இருப்பினும் தமிழக அரசு ஒப்பந்ததாரர்களுக்கு நிதியை வழங்கவில்லை. இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.120 முதல் 200 கோடி வரை நிலுவை வைத்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் குமுறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ