மேலும் செய்திகள்
மாவட்டத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்
22-Jun-2025
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டம் மற்றும் மக்களின் பங்களிப்போடு ரூ 70 லட்சம் செலவில் நகரில் 172 சி.சி.டிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மையம் நகராட்சி அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.சி.சி..டிவி கேமரா இயக்க துவக்க விழா நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது.வர்த்தக சங்க தலைவர் மகபூப்பாட்சா வரவேற்றார். சி.சி. டிவி கேமராக்கள் இயக்கம், பட ஒளிப்பதிவு மையத்தை மாவட்ட போலீஸ் எஸ்.பி., சந்தீஷ் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. கவுதம், கமிஷனர் கண்ணன், பொறியாளர் மீரா அலி, துணை தலைவர் ரமேஷ், கவுன்சிலர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், பெரியார் , சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன் பங்கேற்றனர். கண்காணிப்பு குழு வரதராஜன், வெங்கடாசலம், சரவணன் ஏற்பாடுகளை செய்தனர்.
22-Jun-2025