உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் மிளகாய் வத்தல் பாதுகாக்க குளிரூட்டும் நிலையம்

இளையான்குடியில் மிளகாய் வத்தல் பாதுகாக்க குளிரூட்டும் நிலையம்

சிவகங்கை: இளையான்குடியில் விளையும் மிளகாயை இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய ஏதுவாக மிளகாய் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

2 ஆயிரம் எக்டேரில் மிளகாய்

ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பகுதியில் குண்டு மிளகாய் அதிகஅளவில் விளைவிக்கப்படுகின்றன. இளையான்குடி தாலுகாவில் 2 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் மானாவாரியாக குண்டு மிளகாய் நடவு செய்து வருகின்றனர். நல்ல காரம் இருப்பதால், குண்டு மிளகாய்க்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இளையான்குடி விவசாயிகள் மிளகாய் நடவு செய்து, ஏக்கருக்கு 750 முதல் 800 கிலோ வரை அறுவடை செய்கின்றனர். இந்த மிளகாயை விவசாயிகளிடம், வியாபாரிகள் கிலோ ரூ.80 முதல் 90 க்கு வாங்குகின்றனர். புவிசார் குறியீடு பெற்ற நிலையில் காரம் அதிகம் இருக்கும் என்பதால், தமிழக வியாபாரிகள் இங்கு விளையும் மிளகாய்களை வாங்கி, வெளிமார்க்கெட்களில் கிலோ ரூ.250 முதல் 300 வரை விற்கப்படுகின்றன. எனவே இங்கு விளையும் மிளகாய்களை பதப்படுத்தி வைக்கும்விதமாககுளிரூட்டும் நிலையம், இளையான்குடி பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே கட்டுவதற்கு தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு செய்துள்ளனர்.

நல்ல விலைக்கு விற்கலாம்

இதுகுறித்து வேளாண் வணிக துணை இயக்குனர்தமிழ்செல்வி கூறியதாவது:இளையான்குடியில் விளைந்த மிளகாய்களை வத்தல் ஆக மாற்றி அப்படியே பாலித்தீன் பையில் சேகரித்து அவற்றை குளிரூட்டும் நிலையத்தில் பாதுகாக்கப்படும். மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும் போது அந்தந்த விவசாயிகள் எடுத்து விற்பனை செய்யலாம். இதற்காக அரசு கட்டணம் நிர்ணயம் செய்யும். அந்த கட்டணத்தை விவசாயிகள் செலுத்தி மிளகாய் வத்தலை பாதுகாத்துல, நல்ல விலை கிடைக்கும் போது எடுத்து விற்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை