உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டில் கூட்டமாக அமரும் மாடுகள்

ரோட்டில் கூட்டமாக அமரும் மாடுகள்

காரைக்குடி: காரைக்குடி, கண்டனூர், புதுவயல் ரோடுகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக அமருவதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது. காரைக்குடி, கோட்டையூர், கோவிலூர், கண்டனூர் புதுவயல் காரைக்குடி கல்லூரிச் சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் நெடுஞ்சாலைகளில் கூட்டம் கூட்டமாக படுத்து உறங்குகிறது. இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் நெடுஞ்சாலையில் கிடக்கும் மாடுகளை கவனிக்க தவறுவதால் விபத்து நடக்கிறது. இந்த விபத்தில் சிக்கி வாகன ஓட்டிகள் படுகாயம் அடைகின்றனர். ஒருவர் உயிரிழப்பும் நடந்துள்ளது. சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி