உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மானாமதுரையில் தொடர் ஆக்கிரமிப்பால் நெருக்கடி

 மானாமதுரையில் தொடர் ஆக்கிரமிப்பால் நெருக்கடி

மானாமதுரை: மானாமதுரை நகர் பகுதியில் தொடரும் ஆக்கிரமிப்புகளால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட அண்ணாதுரை சிலை பகுதியில் இருந்து உச்சி மாகாளியம்மன் கோயில், மரக்கடை பஜார் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் மெயின் பஜார் ரோடு மற்றும் தேவர் சிலையிலிருந்து சோனையா கோயில் வரை, சிவகங்கை ரோடு, தாயமங்கலம் ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளை கட்டியுள்ளவர்கள் ரோடு வரை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ரோடுகளில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகவே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகத்தினர் உடனடியாக மானாமதுரை நகர்ப் பகுதியில் சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ