சைபர் கிரைம் போலீசாரால் ரூ.59.92 லட்சம் மீட்பு 4 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 5 மாதத்தில் 11 சைபர் கிரைம் வழக்கில் ரூ.59.92 லட்சம் மீட்கப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரியில் இருந்து இதுவரை 497 புகார்கள் சைபர் கிரைம் கட்டணம் இல்லா எண் 1930க்கு இணையதளம் மூலமாக வந்துள்ளது.இதில் 207 மனுக்களுக்கு ரசீது பதிவு செய்த நிலையில் 11 புகார்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை புகார்தாரர்கள் இழந்த தொகை ரூ.5 கோடியே 57 லட்சத்து 38 ஆயிரத்து 236 வரை ஏமாற்றியவர்களின் பல்வேறு வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த முடக்கம் செய்யப்பட்ட தொகையில் இருந்து இதுவரை ரூ.59.92 லட்சம் ரூபாய் மீட்டு பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டு அதில் ஒருவரை குண்டர் தடுப்பு காவலில் அடைத்துள்ளனர்.