உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தென்னை மட்டைகளுக்கு தீ வைக்கும் கும்பலால் பாதிப்பு

தென்னை மட்டைகளுக்கு தீ வைக்கும் கும்பலால் பாதிப்பு

திருப்புவனம்: திருப்புவனம் வட் டாரத்தில் போதை கும்பல்கள் விவசாய நிலங்கள், தோப்புகளில் மது அருந்துவதுடன் மரங்களுக்கு தீ வைத்துவிட்டு செல்வதாக விவ சாயிகள் புகார் தெரி விக்கின்றனர். திருப்புவனம், மடப்புரம், லாடனேந்தல், திருப்பாச்சேத்தி, கானூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் மூன்று லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் இருந்து 45 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் அறுவடை செய்யப்படும். அறுவடை சமயங்களில் மரங்களில் இருந்து பாலை, காய்ந்த மட்டைகள் அகற்றப்படும். இவற்றை விவசாயிகள் தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே குவித்து வைத்திருப் பார்கள். பாலைகளை கொட்டகை அமைப் பவர்கள் வாங்கி செல் வார்கள். கிடுகு, தட்டி செய் பவர்கள் மட்டைகளை சேகரித்து செல்வார்கள். அவர்களுக்காக விவ சாயிகள் ஆங்காங்கே இவற்றை குவித்து வைத்திருப்பர். சில நாட்களாக தென்னந்தோப்புகளில் மது அருந்த வருவோர் மதுபாட்டில்களை உடைத்து போடுவதுடன், குவிந்து கிடக்கும் மட்டைகளுக்கு தீ வைத்து செல்கின்றனர். விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: முன்பெல்லாம் தென்னந்தோப்பு காவலுக்கு ஆட்கள் இருப்பார்கள். தற்போது யாரும் காவல் பணிக்கு வருவதில்லை. இதனால் மது அருந்த வருவோர் தென்னை மட்டைகளுக்கு தீ வைத்து செல்கின்றனர். இது குறித்து கேட்கும் விவ சாயிகளை கத்தி, பாட்டிலை காட்டி மிரட்டுகின்றனர். எனவே விவசாயநிலங்களில் புகுந்து மது அருந்து வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி