மேலும் செய்திகள்
மரங்கள் வெட்டி கடத்தலா; கிராம மக்கள் புகார்
02-Sep-2025
திருப்புவனம் : திருப்புவனம் வாரச்சந்தையில் சாய்ந்து கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை ஆடு, கோழி சந்தையும் அதன் பின் காய்கறி சந்தையும் மறுநாள் புதன் கிழமை மாட்டுச் சந்தையும் நடைபெறும். திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விளையும் பொருட்களை விற்பனை செய்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். வாரச்சந்தை அன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இடத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. கடந்த வாரம் சந்தை வளாகத்தில் உள்ள மரம் சாய்ந்தது. சாய்ந்த மரம் அப்புறப்படுத்தப் படாததால் சிரமம் ஏற்பட்டு வருகிறது. விபத்து ஏற்படும் முன் மரங்களை அப்புறப்படுத்த வேண்டும்.
02-Sep-2025