உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமடைந்த தண்ணீர் தொட்டி; பக்தர்கள் அவதி

சேதமடைந்த தண்ணீர் தொட்டி; பக்தர்கள் அவதி

திருப்புவனம் : திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் வழங்கி நீராட அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி சேதமடைந்ததால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.மறைந்த முன்னோர்களுக்கு அவர்களது நினைவு நாள், அமாவாசை உள்ளிட்ட தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் சந்ததியினரை ஆசிர்வதிப்பதாக ஐதீகம், இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் வழங்கிய பின் புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்கின்றனர்.வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாத காலங்களில் வைகை ஆற்றினுள் பேரூராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் தினசரி தண்ணீர் நிரப்பப்பட்டு அதில் நீராடுவார்கள்.தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் தண்ணீர் தொட்டி பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு வீணாகி வருகிறது.தண்ணீர் நிரப்பினாலும் விரிசல் மூலமாக தண்ணீர் வெளியேறி விடுவதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளா கின்றனர். எனவே புதிய குளியல் தொட்டி அமைத்து தர வேண்டும், மேலும் பெண் பக்தர்கள் உடை மாற்ற தனி அறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ