உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை  செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு  

ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை  செப்.30 வரை அவகாசம் நீட்டிப்பு  

சிவகங்கை: தமிழகத்தில் அரசு, தனியார் ஐ.டி.ஐ.,க்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 132 அரசு, 311 தனியார் ஐ.டி.ஐ.,க்கள் இயங்குகின்றன. இங்கு 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக.,30 வரை வழங்கப்பட்டது. மாணவர்களின் சேர்க்கையை இன்னும் அதிகரிக்கும் நோக்கில், நேரடி சேர்க்கைக்கான கால அவகாசத்தை செப்., 30 வரை நீட்டித்துள்ளனர். இங்கு சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. மாதம் ரூ.750 ஊக்கத்தொகை, அரசு சார்பில் இலவச சைக்கிள், சீருடை, ஷூ, பயிற்சிக்கான கருவிகள், பஸ் வசதி செய்து தரப்படும். கடந்த ஆண்டுகளில் ஐ.டி.ஐ.,க்களில் படித்த மாணவர்களில் 80 சதவீதம் பேர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அரசு ஐ.டி.ஐ.,க்களில் இன்றைய தொழிற் சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழில்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குன ரகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி