உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் குறையும் மழை: நெல் நடவு, விதைப்பு சரிவு

திருப்புத்துாரில் குறையும் மழை: நெல் நடவு, விதைப்பு சரிவு

திருப்புத்துார்: திருப்புத்துார் வட்டாரத்தில் குறைந்த வரும் மழையால் நெல்சாகுபடி கடந்த ஆண்டை விட 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. திருப்புத்துார் வட்டாரத்தில் இந்த ஆண்டிற்கான கோடை மழை 200 மி.மீ., பெய்தது. கடந்த ஆண்டை விட சற்றே அதிகமாக இருந்தது. பின்னர் தென்மேற்கு பருவ மழை 207 மி.மீ., அளவில் இருந்தது. கடந்த ஆண்டை விட 50 சதவீதத்திற்கும் குறைவான மழையாகும். தற்போது அக்டோபரில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் கடந்த ஆண்டு 590 மி.மீ., பெய்திருந்த நிலையில், இந்த அக்.ல் 100 மி.மீ.,க்கும் குறைவாகவே பெய்துள்ளது. அக்,,நவ., இருமாதங்களில் வ.கி.பருவ மழை சராசரியாக 368 மிமீ. பெய்வதுண்டு. இதனால் நவ.ல் மழை தொடரலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 4000 ஆயிரம் ஏக்கரில் நெல்சாகுபடிக்கான நடவு,விதைப்பு பணிகள் அக்டோபரில் நடந்திருந்தன. இந்த ஆண்டு வேளாண், வருவாய்த்துறை கணக்கெடுப்பில் அக். இறுதியில் 1650 ஏக்கர் அளவிலேயே விதைப்பு மற்றும் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால் வழக்கத்தை விட 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதனால் ஆறுகளில் நீர்வரத்து மற்றும் மழை தொடர்ந்தாலே வழக்கமான அளவில் நெல்சாகுபடி இப்பகுதியில் நடைபெறும். தற்போது மணிமுத்தாறில் மட்டும் ஒரளவு நீர்வரத்து துவங்கியுள்ளது.பாலாறு,விருசுழியாறுகளில் நீர் வரத்து இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி