உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காயத்துடன் மான் மீட்பு

காயத்துடன் மான் மீட்பு

எஸ்.புதுார் : எஸ்.புதூர் அருகே வாகனம் மோதியதில் காயத்துடன் புள்ளிமான் மீட்கப்பட்டது. புழுதிபட்டி மலைப்பகுதியில் நேற்று தண்ணீர் தேடி வந்த ஆண் புள்ளிமான் ஒன்று திருச்சி -- மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து உயிருக்கு போராடியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மானுக்கு முதலுதவி செய்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !