உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பத்திரங்கள் பதிவதில் தாமதம்: பொதுமக்கள் அதிருப்தி

பத்திரங்கள் பதிவதில் தாமதம்: பொதுமக்கள் அதிருப்தி

மானாமதுரை: மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் பதிவதற்கு மிகவும் தாமதம் ஆவதால் பத்திர எழுத்தர்கள், பத்திரம் பதிபவவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்மானாமதுரையில் பத்திரப்பதிவு சார் பதிவாளர் அலுவலகம் அண்ணாதுரை சிலை அருகே செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரை சுற்று வட்டாரத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும்,ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மற்றும் அருகே உள்ள கிராம பகுதிகளை சேர்ந்தவர்கள் பத்திரங்களை பதிவு செய்ய வருகின்றனர்.6 மாதங்களுக்கு முன்பு தினமும் 40 க்கு மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. இந்த அலுவலகத்தில் 8 மாதங்களாக சார்பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளதால் தினமும் பொறுப்பு சார் பதிவாளர்களே பத்திரங்களை பதிவு செய்து வருகின்றனர். பத்திரம் பதிவு செய்ய நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் தினமும் பத்திரங்களை பதிய தாமதம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.மேலும் பத்திரப்பதிவு அலுவலகம் தற்போது புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் முழுவதும் பிற பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். பத்திரம் பதிய வருபவர்கள் கூறியதாவது: மானாமதுரை சார் பதிவாளர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அலுவலக நேரம் காலை 10:00 மணிக்கு துவங்கினாலும் 2 மாதமாக முதல் பத்திரத்தை பதிவதற்கு மதியம் 1:00 மணி ஆகிவிடுகிறது. ஒரு நாளைக்கு 10 பத்திரங்கள் பதிய கூட முடியவில்லை. மேலும் அப்படியே பத்திரங்கள் பதிந்தாலும் அதனை வாங்குவதற்கு மேலும் தாமதமாகிறது.நிரந்தர சார் பதிவாளர் இல்லாத காரணத்தினால் பொறுப்பு சார் பதிவாளர்கள் அதனை சரிபார்த்து பத்திரங்கள் பதிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் நிரந்தர சார்பதிவாளரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.சார் பதிவாளர் அலுவலக அதிகாரி கூறியதாவது: மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகம் தற்காலிகமாக வேறு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.அங்கு அடிக்கடி இன்டர்நெட் பிரச்னை ஏற்பட்டு வருவதால் ஒரு சில நாட்களில் பத்திரங்கள் பதிய தாமதம் ஏற்பட்டு வருகிறது.இதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ