உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மாணவ,மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி

 மாணவ,மாணவியர்களுக்கு சைக்கிள் வழங்கிய துணை முதல்வர் உதயநிதி

காரைக்குடி: தமிழகம் முழுவதும் உள்ள, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி காரைக்குடியில் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ மாணவியருக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு, ரூ.246 கோடி மதிப்பீட்டில் 5.34 லட்சம் மாணவ மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 2 லட்சம் சைக்கிள்கள் தயார் நிலையில் உள்ளது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்ட தொடக்க விழா, சிறந்த பள்ளிகளுக்கான விருது, குழந்தைகள் தின விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. துணை முதல்வர் உதயநிதி மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்பட்டது. கலெக்டர் பொற்கொடி வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பெரியகருப்பன், மெய்யநாதன்,மகேஷ் முதன்மை செயலர்கள் சந்திரமோகன், சரவணவேல்ராஜா, எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி, மேயர் முத்துத்துரை, துணை மேயர் குணசேகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ