மாடக்கோட்டையில் குடிநீருக்காக தவிப்பு
சாலைக்கிராமம்: இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வண்டல் ஊராட்சி மாடக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதை தொடர்ந்து குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.மாடக் கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டமும் இல்லாத காரணத்தினால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.வண்டிகளில் வரும் குடிநீரை ரூ.15 கொடுத்து வாங்கும் நிலையில் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் மாடக்கோட்டை சுற்றுவட்டார கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.