மேலும் செய்திகள்
'பள்ளிகள் நிர்வாகத்தில் எக்கச்சக்க குளறுபடி'
02-Jan-2025
தேவகோட்டை : அரசின் சலுகைகள் அனுபவிக்க முடியாமல் ஏழை மாணவர்களின் அவதியை போக்க அரசு மேல்நிலைப் பள்ளி பற்றி முதல்வர் அறிவிப்பாரா.தேவகோட்டையில் 15 அரசு நடுநிலைப்பள்ளி, ஒரு நகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் தனியார் உதவி பெறும் பள்ளிகள் அதிகம் உள்ளன.மேல்நிலை படிக்க வேண்டும் என்றால் தனியார் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் தான் உள்ளன. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி எதுவும் கிடையாது. தனியார் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெறுவதோடு, தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்த அளவே சேர்க்கை என்பதால் அந்த பள்ளிகளில் கூடுதல் மார்க் பெற்றவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கிறது.இங்கு படித்த 15 சதவிகித மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தேவகோட்டையில் ஒரே ஒரு நகராட்சி உயர்நிலைப் பள்ளி தான் உள்ளது. அந்த பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நுாறு சதவிகிதம் தேர்ச்சியை காண்பிக்கிறது. ஆனால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேல்நிலை வகுப்பு தொடர முடியாமல் அவதிப்படுகின்றனர்.உயர்கல்வி தொடர விரும்புபவர்கள் அருகில் உள்ள அனுமந்தக்குடி, பெரியகாரை அரசு பள்ளிகளில் சேரும் நிலை உருவாகி வருகிறது. ஓராண்டுக்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூட தேவகோட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாதது வெட்க கேடானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது. நகராட்சி உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனாலும் நடவடிக்கை இல்லை.முதல்வர் கவனத்தில் கொண்டு இந்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டுமென பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
02-Jan-2025