மேலும் செய்திகள்
மனு தீர்வு நாள் முகாம்
19-May-2025
சிவகங்கை: காரைக்குடியில் சிறப்பாக பணியாற்றிய வடக்கு ஸ்டேஷன் போலீசாரை பாராட்டி டி.ஐ.ஜி., மூர்த்தி சான்றுகள் வழங்கினார்.கடந்த சில மாதங்களாக காரைக்குடியில் பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு சிலர் கொள்ளையடித்து வந்தனர். இதை தடுக்க எஸ்.பி.,ஆஷிஷ் ராவத், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இத்தனிப்படை போலீசார் தொடர்ந்து நடத்திய தேடுதலில், விருதுநகரை சேர்ந்த பொன்ராஜ் 45, என்பவரை கைதுசெய்து விசாரித்தனர்.போலீசாரின் விசாரணையில் பொன்ராஜ் மீது இங்கு மட்டுமின்றி தமிழக அளவில் 25 வழக்குகள் வரை நிலுவையில் உள்ளன. காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியில் முகாமிட்டு பூட்டியிருந்தவீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்தது தெரிந்தது. சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையிலான போலீசாருக்கு பாராட்டு சான்றுகளை டி.ஐ.ஜி., மூர்த்தி வழங்கினார்.
19-May-2025