உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாத டிஜிட்டல் போர்டு

மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் செயல்படாத டிஜிட்டல் போர்டு

மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள நடை மேடைகளில் டிஜிட்டல் கோச் நம்பர் மற்றும் மின்விசிறிகள் இயங்காததால் பயணிகள் சிரமப்பட்டனர்.மதுரை ரயில்வே கோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே ஜங்ஷனாக மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் விளங்கி வருகிறது. மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வழியாக ராமேஸ்வரத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து செல்கின்றன. மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள 4க்கும் மேற்பட்ட நடை மேடைகள் உள்ளன. பெட்டிகளின் கோச் நம்பர்களை பயணிகள் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு இல்லாததாலும், நடைமேடைகளில் உள்ள மின்விசிறி இயங்காதாலும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். ரயில்வே நிர்வாகம் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை