உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தினமலர் பட்டம் இதழ் அறிவியல், பொது அறிவு பெட்டகம்

தினமலர் பட்டம் இதழ் அறிவியல், பொது அறிவு பெட்டகம்

காரைக்குடி: காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழை காரைக்குடி எம்.எல்.ஏ., எஸ். மாங்குடி வழங்கினார். தலைமையாசிரியர் பிரிட்டோ வரவேற்றார்.மாங்குடி எம்.எல்.ஏ., கூறும் போது;மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது தினமலர் பட்டம் இதழ். இதில் நாளுக்கு நாள் வித்தியாசமான அறிவியல் கட்டுரைகள், ஆராய்ச்சி கட்டுரைகள், வரலாற்று செய்திகள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் அனைத்தும் எளிய முறையில் மாணவர்கள் எளிதாக படிக்கும் வகையில் இடம் பெறுகிறது. தவிர மாணவர்களின் போட்டி தேர்வுகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.இதனை அரசு பள்ளி மாணவர்கள், தினமும் படிக்க வேண்டும். அதன் அடிப்படையில், காரைக்குடி தொகுதிக்குட்பட்ட 10 பள்ளிகளுக்கு பட்டம் இதழை என் பரிசாக வழங்கி உள்ளேன். இதனை மாணவர்கள் படிப்பதோடு மற்றவர்களிடமும் இதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ