மேலும் செய்திகள்
ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி
18-Jun-2025
சிவகங்கை; சிவகங்கை போலீசாருக்கு பேரிடர் காலங்களில் மக்களைப் பாதுகாக்கவும் மீட்பு நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளவும் பயிற்சி வழங்கப்படுகிறது.சிவகங்கையில் உள்ள சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாக்க பயிற்சி வழங்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கில் 50 போலீசாரும் ஆயுதப்படையில் 10 போலீசாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்த பயிற்சியில் பேரிடர் மற்றும் பிற அவசர காலங்களில் மீட்பு நடவடிக்கை, முதலுதவி மற்றும் பேரிடரை சமாளிப்பதற்கான பிற நுட்பங்களை உள்ளடக்கிய பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கமாண்டோ பிரிவை சேர்ந்த எஸ்.ஐ., சுப்புராஜ் குழுவினர் இந்த பயிற்சியை அளிக்கின்றனர்.
18-Jun-2025